ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)

விற்பனைகள்: 1800-209-0144| சேவை: 1800-209-5858 சேவை சாட்: +91 75072 45858

இங்கிலீஷ்

Claim Assistance
Get In Touch
Zero Depreciation Car Insurance Cover
ஜூலை 21, 2020

உங்கள் காருக்கான பூஜ்ஜிய தேய்மான காப்பீடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

பூஜ்ஜிய தேய்மான பாலிசி என்பது பம்பர்-டு-பம்பர் கார் காப்பீடு என்றும் அழைக்கப்படுகிறது. பூஜ்ஜிய தேய்மானம் என்பது ஒரு கார் காப்பீட்டு கவர் ஆகும், இது உங்கள் காரை சேதப்படுத்திய விபத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய தேய்மானச் செலவிற்கு உங்களுக்கு காப்பீடு வழங்குகிறது. தேய்மான செலவு என்பது தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் பொதுவான தேய்மானம் காரணமாக உங்கள் காரின் மதிப்பில் ஏற்படும் குறைவு ஆகும். நீங்கள் ஒரு கார் காப்பீட்டு கோரலை தாக்கல் செய்யும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த தன்னார்வ விலக்கு மற்றும் உங்கள் காருடன் தொடர்புடைய தேய்மான செலவைக் கழித்த பிறகு உங்களுக்கு கோரல் தொகை செலுத்தப்படும். ஆனால், நீங்கள் பூஜ்ஜிய தேய்மான கார் காப்பீடு  கவரை தேர்வு செய்தால், உங்கள் கையிலிருந்து தன்னார்வ விலக்குகளை மட்டுமே நீங்கள் செலுத்த வேண்டும். மற்றும் உங்கள் காப்பீட்டு வழங்குநர் மீதமுள்ள கோரல் தொகையை செலுத்துவார். பூஜ்ஜிய தேய்மான காப்பீடு உங்கள் காரின் பின்வரும் பாகங்களை பழுதுபார்ப்பதற்கு/மாற்றுவதற்கு முழுமையான கவரேஜை வழங்குகிறது: ஃபைபர், ரப்பர், மெட்டல், கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள். பூஜ்ஜிய தேய்மான கார் காப்பீட்டின் நன்மைகள்
  • விபத்தைத் தொடர்ந்து, உங்கள் காரின் பாகங்களை பழுதுபார்ப்பதற்காக/மாற்றுவதற்காக ஒரு பெரிய தொகையைச் செலுத்துவதில் இருந்து பூஜ்ஜிய தேய்மானக் காப்பீடு உங்களைக் பாதுகாக்கிறது, இக்காப்பீடு இல்லையெனில் நீங்கள் அதைச் செலுத்த நேரிடும்.
  • பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டுடன், உங்கள் கோரல் தொகையின் அதிகபட்ச செட்டில்மெண்டை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் கட்டாய விலக்கு செலவை மட்டும் ஏற்க வேண்டும்.
  • ஒரு பூஜ்ஜிய தேய்மானக் காப்பீடு உங்கள் தற்போதைய கார் காப்பீட்டு பாலிசி மூலம் வழங்கப்படும் காப்பீட்டிற்கு மேல் உங்கள் காருக்கு காப்பீட்டை வழங்குகிறது.
  • நீங்கள் ஒரு கார் காப்பீட்டு கோரலை தாக்கல் செய்யும்போது உங்கள் சேமிப்புகளை அதிகரிக்க ஒரு பூஜ்ஜிய தேய்மானக் காப்பீடு உதவுகிறது.
ஒரு பாலிசியை வாங்கும்போது நீங்கள் பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டை வாங்கவில்லை என்றால், நீங்கள் புதுப்பித்தல் நேரத்தில் பெறலாம், அதாவது கார் காப்பீடு புதுப்பித்தல் . பூஜ்ஜிய தேய்மானக் கார் காப்பீட்டை வாங்குவதற்கு முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்
  • நீங்கள் பூஜ்ஜிய தேய்மான காப்பீட்டை வாங்க முடிவு செய்வதற்கு முன்னர் அதன் விலக்குகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும். சில பொதுவான விலக்குகள்:
    • நீர் உட்புகுதல் அல்லது எண்ணெய் கசிவு காரணமாக என்ஜின் சேதம்
    • மெக்கானிக்கல் பிரேக்டவுன்
    • பொதுவான தேய்மானம் காரணமாக ஏற்படும் சேதம்
    • காப்பீடு செய்யப்படாத பொருட்களின் சேதம்
    • வாகனத்தின் முழுமையான/மொத்த இழப்பு
  • பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டை வாங்கிய பிறகு நீங்கள் கார் காப்பீட்டு கோரலை மேற்கொள்ளக்கூடிய எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும். உங்கள் சாதாரண கார் காப்பீட்டு பாலிசியுடன் பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டை நீங்கள் தேர்வு செய்திருந்தால் பெரும்பாலான நிறுவனங்கள் உங்கள் பாலிசி ஆண்டில் 2 க்கும் அதிகமான கோரல்களை மேற்கொள்ள உங்களை அனுமதிக்காது.
  • நீங்கள் பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டை பெற வேண்டிய சூழ்நிலைகள் பின்வருமாறு:
    • உங்கள் கார் புதியது (5 ஆண்டுகளுக்கும் குறைவாக)
    • உங்கள் கார் ஒரு சொகுசு கார்
    • நீங்கள் விபத்து ஏற்படும் பகுதியில் வசிக்கிறீர்கள்
    • உங்கள் காரில் மிகவும் விலையுயர்ந்த ஸ்பேர் பாகங்கள் உள்ளன
  • நீங்கள் கார் காப்பீட்டு விகிதங்களை ஒப்பீடு செய்ய வேண்டும், பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டுடன் உங்கள் கார் காப்பீட்டு பாலிசியை நீங்கள் வாங்குவதற்கு/புதுப்பிப்பதற்கு முன்னர் ஒப்பிட வேண்டும்.
விரிவான கார் காப்பீட்டு பாலிசி மற்றும் பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டுடன் கூடிய கார் காப்பீட்டு பாலிசி இடையே உள்ள வேறுபாடு
வேறுபாட்டு புள்ளிகள் விரிவான கார் காப்பீடு பூஜ்ஜிய தேய்மானம் கொண்ட பாலிசி
கவரேஜ் ஒரு விரிவான கார் காப்பீட்டு பாலிசி பின்வரும் காப்பீடுகளை வழங்குகிறது: இயற்கை பேரிடர்களால் உங்கள் காருக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம், திட்டமிடப்படாத செயல்களால் உங்கள் காருக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம், தனிநபர் விபத்துக் காப்பீடு, மூன்றாம் தரப்பினர் சட்ட பொறுப்பு பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டுடன் ஒரு விரிவான கார் காப்பீட்டு பாலிசி தேய்மான செலவை கருத்தில் கொள்ளாமல் உங்கள் சேதமடைந்த கார் (காப்பீடு செய்யப்பட்டது) பாகங்களை பழுதுபார்த்தல்/மாற்றுவதற்கான காப்பீட்டுடன் அனைத்து காப்பீடுகளையும் வழங்குகிறது.
பிரீமியம் பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டுடன் ஒப்பிடுகையில் ஒரு விரிவான கார் காப்பீட்டிற்கான பிரீமியம் சிறிது குறைவானது. இது விரிவான கார் காப்பீட்டிற்கு மேல் வாங்கப்பட வேண்டிய ஒரு ஆட்-ஆன் காப்பீடு என்பதால், செலுத்த வேண்டிய பிரீமியம் ஒரு சாதாரண பாலிசியை விட சற்று அதிகமாக இருக்கும்.
கோரல்களின் எண்ணிக்கை உங்கள் காரின் ஐடிவி வரை உங்கள் விரிவான கார் காப்பீட்டு பாலிசியின் கீழ் நீங்கள் பல கோரல்களை மேற்கொள்ளலாம். நீங்கள் பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டை வாங்கினால் உங்கள் பாலிசி ஆண்டில் அதிகபட்சமாக 2 கோரல்களை மேற்கொள்ளலாம்.
நீங்கள் ஏற்க வேண்டிய செலவுகள் கட்டாய விலக்குகள் மற்றும் உங்கள் கார் பாகங்களின் தேய்மான செலவு போன்ற ஒரு பெரிய தொகையை நீங்கள் ஏற்க வேண்டும். உங்கள் காப்பீட்டு வழங்குநரால் தேய்மான செலவு செலுத்தப்படுவதால் நீங்கள் செலுத்த வேண்டிய செலவுகள் கணிசமாக குறைக்கப்படுகின்றன.
காரின் பயன்பாட்டு காலம் ஒரு புதிய மற்றும் பழைய காருக்கு விரிவான கார் காப்பீட்டை வாங்க முடியும். 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்பட்ட புதிய கார்களுக்கு மட்டுமே பூஜ்ஜிய தேய்மானக் காப்பீட்டை வாங்க முடியும்.
  உங்கள் கார் காப்பீட்டு பாலிசியின் பிரீமியத்தை பூஜ்ஜிய தேய்மானக் காப்பீடு எவ்வாறு பாதிக்கிறது? உங்கள் கார் இன்சூரன்ஸ் விலைகள் பின்வரும் காரணிகளைப் பொறுத்தது:
  • காரின் ஐடிவி (காப்பீட்டாளர் அறிவித்த மதிப்பு)
  • என்சிபி (நோ கிளைம் போனஸ்), பொருந்தினால்
  • ஒவ்வொரு ஆண்டும் மாறுபடக்கூடிய உங்கள் காரின் லையபிலிட்டி பிரீமியம்
  • வாகனத்தின் கியூபிக் கெப்பாசிட்டி (சிசி)
  • வாகனத்தின் பதிவு இடம்
  • ஆட்-ஆன் கவர்கள் (விரும்பினால்)
  • உங்கள் காரில் நீங்கள் பயன்படுத்திய உபகரணங்கள் (விரும்பினால்)
பூஜ்ஜிய தேய்மானக் காப்பீடு என்பது உங்கள் விரிவான கார் காப்பீட்டுடன் நீங்கள் பெற வேண்டிய ஒரு ஆட்-ஆன் காப்பீடாகும். எனவே, இந்த ஆட்-ஆன் காப்பீட்டை தேர்வு செய்வது உங்கள் கார் காப்பீட்டு பிரீமியத்தின் செலவை சிறிது அதிகரிக்கும், ஆனால், இந்த சிறிய அதிகரிக்கப்பட்ட மதிப்பு நீங்கள் கார் காப்பீட்டு கோரலுக்காக தாக்கல் செய்யும்போது உங்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்தும்.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? இதை மதிப்பிடவும்

சராசரி மதிப்பீடு 5 / 5 வாக்கு எண்ணிக்கை: 18

இதுவரை மதிப்பீடு எதுவும் இல்லை! இந்த பதிவை மதிப்பிடும் முதல் நபராக இருங்கள்.

இந்த கட்டுரையை விரும்புகிறீர்களா?? உங்கள் நண்பர்களுடன் இதனை பகிருங்கள்!

உங்கள் சிந்தனைகளை பகிருங்கள். கீழே ஒரு கருத்தை இடுங்கள்!

பதிலளிக்கவும்

உங்கள் இமெயில் முகவரி வெளியிடப்படாது. அனைத்து இடங்களையும் நிரப்புக