கார் வாங்குவது இந்தியாவில் பலருக்கு இன்னும் ஒரு கனவாகும். எனவே நீங்கள் இறுதியாக உங்கள் இலக்கை அடையும்போது, போதுமான மற்றும் பொருத்தமான காப்பீட்டுடன் உங்கள் திட்டத்தை பாதுகாப்பது அவசியமாகும். சட்டத்தின்படி மூன்றாம் தரப்பினர் காப்பீட்டை கொண்டிருப்பது கட்டாயமாகும். மேலும், விபத்து ஏற்பட்டால் உங்கள் நிதிகள் பாதிக்கப்படும் என்பதால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உங்கள் ஓன் டேமேஜ் காப்பீட்டை கொண்டிருப்பது அறிவுறுத்தப்படுகிறது. இப்போது மூன்றாம் தரப்பினர் காப்பீடு மற்றும் ஓன் டேமேஜ் காப்பீடு என இரண்டையும் இணைக்கும் ஒரு பாலிசி விரிவான காப்பீடாகும். அப்படியிருந்தும் எழும் ஒரு முக்கியமான கேள்வி, நாம் வாங்கும் காப்பீட்டு பாலிசியில் காப்பீட்டுத் தொகை எவ்வளவு? மற்றும் கார் காப்பீட்டை ஆன்லைனில் வாங்க முடியுமா? காப்பீட்டாளர் அறிவித்த மதிப்பு எனப்படும் ஐடிவி-யின் அடிப்படையில் காப்பீடு செய்யப்பட்ட தொகை தீர்மானிக்கப்படுகிறது. மற்றும் நீங்கள்
ஆன்லைன் கார் காப்பீடு அல்லது ஆஃப்லைன் என உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யலாம், ஆனால் தேர்வு செய்வதற்கு முன்னர் பல்வேறு சலுகைகளை ஆன்லைனில் ஒப்பிடுவது எளிதானது.
காப்பீட்டாளர் அறிவித்த மதிப்பு என்றால் என்ன?
ஐடிவி என்பது கார் காப்பீட்டு பாலிசியின் காப்பீட்டுத் தொகை என்பதை நாம் முன்னரே பார்த்தோம். இது கார் சேதமடைந்தால் அல்லது திருடப்பட்டால் காப்பீடு செய்யப்பட்டவருக்கு காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் அதிகபட்ச தொகையாகும்.
காப்பீட்டாளர் அறிவித்த மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
ஒரு புதிய காருக்கு, காப்பீட்டாளர் அறிவித்த மதிப்பு என்பது உற்பத்தியாளரால் பட்டியலிடப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஒவ்வொரு ஆண்டும் தேய்மானம் பொருந்தும். புதிதாக வாங்கிய காரின் தேய்மானம் 5% ஆகும், எனவே உங்கள் காரின் அதிகபட்ச ஐடிவி எக்ஸ்-ஷோரூம் விலையில் 95% ஆக இருக்கும். உங்கள் காரை ஷோரூமில் இருந்து வெளியே எடுத்தப் பிறகு, ஐடிவி குறைகிறது மற்றும் 5 ஆண்டுகளை நிறைவு செய்த கார் 50% விகிதம் வரை தேய்மானம் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேய்மான விகிதத்தை காண்பிக்கும் அட்டவணை கீழே காண்பிக்கப்பட்டுள்ளது
காரின் பயன்பாட்டு ஆண்டுகள் |
தேய்மான விகிதம் |
ஆறு மாதங்களுக்கு மேல் இல்லை |
5% |
6 மாதங்களுக்கு மேல் ஆனால் 12 மாதங்களுக்கு மிகாமல் |
15% |
1 வருடத்திற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்கு மிகாமல் |
20% |
2 வருடங்களுக்கு மேல் 3 வருடங்களுக்கு மிகாமல் |
30% |
3 வருடங்களுக்கு மேல் 4 வருடங்களுக்கு மிகாமல் |
40% |
4 வருடங்களுக்கு மேல் 5 வருடங்களுக்கு மிகாமல் |
50% |
காரின் பயன்பாடு ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்தால், காப்பீட்டு நிறுவனம் மற்றும் கார் உரிமையாளருக்கு இடையில் காருக்கான மதிப்பு பரஸ்பரமாக தீர்மானிக்கப்படும்.
கார் காப்பீட்டில் ஐடிவி ஏன் முக்கியமானது?
உங்களுக்கு "கார் காப்பீட்டில் ஐடிவி ஏன் முக்கியம்?" என்ற கேள்வி இருந்தால் அதற்கான பதில் இங்கே: ஐடிவி என்பது காப்பீடு செய்யப்பட்ட வாகனம் தொடர்பாக காரின் உரிமையாளரால் முன்வைக்கப்படும் அதிகபட்ச கோரல் தொகையாகும். ஐடிவி அதிகமாக இருந்தால், விபத்து அல்லது பிற கோரக்கூடிய நிகழ்வுகள் ஏற்பட்டால் அதிக தொகையை கோர முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஐடிவி இரண்டு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரமாக தீர்மானிக்கப்படுவதால் 5 ஆண்டுக்கு மேற்பட்ட காருக்கு அதிக ஐடிவி-ஐ கொண்டிருக்க முடியும். பரஸ்பர முடிவு செய்யப்பட்ட ஐடிவி பொதுவாக 15% வரை மாறுபடும்.
காப்பீட்டாளர் அறிவித்த மதிப்பு காப்பீட்டு பிரீமியத்தை பாதிக்கிறதா?
காப்பீட்டாளர் அறிவித்த மதிப்பு காப்பீட்டு பிரீமியத்துடன் நேரடி உறவைக் கொண்டுள்ளது. பொதுவாக, காப்பீட்டு பிரீமியம் ஐடிவி-யின் 2%-3% ஆகும். எனவே அதிக ஐடிவி என்பது அதிக காப்பீட்டு பிரீமியத்தை குறிக்கிறது. எனவே நீங்கள் குறைந்த பிரீமியத்தை விரும்பினால், குறைந்த ஐடிவி மதிப்பை தேர்வு செய்வது பாதுகாப்பானது. ஆனால் இதன் பொருள், உங்கள் காப்பீட்டுத் தொகை குறைவாக இருக்கும், மேலும் உங்கள் கோரல் தொகை காப்பீடு செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தால் உங்களுக்கு முழுமையாக செலுத்தப்படாது.
எனது காரின் காப்பீட்டாளர் அறிவித்த முழு மதிப்பு எனக்கு எப்போது செலுத்தப்படும்?
நீங்கள் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் முழு தொகையையும் பெற இரண்டு சூழ்நிலைகள் இருக்கும். முதலில், உங்கள் கார் திருடப்படும் போது. உங்கள் வாகனம் திருடப்பட்டால், நீண்ட நேர தேடல் மற்றும் போலீஸ் ஆவணப்படுத்தலுக்குப் பிறகு, காப்பீட்டு நிறுவனம் முழு தொகையுடன் உங்கள் கோரலை செலுத்தும். இரண்டாவதாக, உங்கள் ஒற்றை கோரல் தொகை காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 75% ஐ மீறும் போது ஆகும். உங்கள் ஒற்றை கோரல் தொகை ஐடிவி-யின் 75%-ஐ விட அதிகமாக இருந்தால், காப்பீட்டு நிறுவனம் அதை முழு இழப்பு சூழ்நிலையாக கருதும் மற்றும் முழு தொகையையும் உங்களுக்கு செலுத்தும். மொத்த விலக்கு தொகையை செலுத்த நீங்கள் பொறுப்பாவீர்கள் என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும்.
எந்த பாலிசி எனக்கு சிறந்தது?
வழங்கப்படும் பல்வேறு
மோட்டார் காப்பீட்டின் வகைகள் மீது, பாலிசியின் ஐடிவி-க்கு அருகிலுள்ள அதன் தற்போதைய சந்தை மதிப்பைக் கொண்ட பாலிசி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும், ஏனெனில் இது உங்கள் காருக்கு ஏதேனும் ஏற்பட்டால் உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும். எனவே, உங்கள் காரின் சரியான மதிப்பை பொருத்தமான பிரீமியம் விகிதத்தில் அமைக்க
காப்பீட்டில் ஐடிவி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
பொதுவான கேள்விகள்:
ஒரு பாலிசி ஆண்டிற்குள் நான் கார் காப்பீட்டை ஒன்றுக்கு மேற்பட்ட முறை கோர முடியுமா?
ஆம், ஒரு கொடுக்கப்பட்ட பாலிசி ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கார் காப்பீட்டை கோர முடியும், ஆனால் மொத்த கோரல் தொகை காப்பீடு செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது.
காப்பீட்டு நிறுவனம் அதிக ஐடிவி-க்கு ஒப்புக்கொண்டுள்ளது, பின்னர் கோரல் தொகை சாதாரண ஐடிவி-ஐ விட அதிகமாக உள்ளது, ஆனால் அதிக ஒப்புக்கொள்ளப்பட்ட ஐடிவி-ஐ விட குறைவாக உள்ளது. காப்பீட்டு நிறுவனம் இந்த அடிப்படையில் கோரலை மறுக்க முடியுமா?
இல்லை, ஒப்புக்கொள்ளப்பட்ட ஐடிவி-க்குள் இருந்தால் கோரல் சாதாரண ஐடிவி-ஐ மீறும் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் கோரலை மறுக்க முடியாது.
பதிலளிக்கவும்