ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)

விற்பனைகள்: 1800-209-0144| சேவை: 1800-209-5858 Whatsapp Logo சர்வீஸ் சாட்: +91 75072 45858

Claim Assistance
  • கோரல் உதவி எண்கள்

  • மருத்துவ உதவி இலவச எண் 1800-103-2529

  • 24x7 சாலையோர உதவி 1800-103-5858

  • மோட்டார் கோரல் பதிவு 1800-209-5858

  • மோட்டார் ஆன் தி ஸ்பாட் 1800-266-6416

  • உலகளாவிய பயண உதவி மையம் +91-124-6174720

  • நீடித்த உத்தரவாதம் 1800-209-1021

  • அக்ரி கோரல்கள் 1800-209-5959

Get In Touch

எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.

ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144

டொயோட்டா இனோவா கார் காப்பீட்டை வாங்குங்கள்/புதுப்பியுங்கள்

Innova Car Insurance

கார் காப்பீட்டு விலைக்கூறலுக்கான விவரங்களை பகிரவும்

தயவுசெய்து பெயரை உள்ளிடவும்
மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து செல்லுபடியான இமெயில் ஐடி-ஐ உள்ளிடவும்

பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு பாலிசியில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, செயல்முறை தொடர்பாக உங்களுக்கு உதவ வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.

இந்தியாவில் டொயோட்டா இனோவா காரின் உரிமையாளராக, உங்கள் வாகனம் எதிர்பாராத விபத்துகள் அல்லது சேதங்களுக்கு எதிராக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியமாகும். கார் காப்பீடு என்பது வாகன உரிமையின் முக்கியமான அம்சமாகும், இது நிதி பாதுகாப்பு மற்றும் மன அமைதியை வழங்குகிறது. இந்தியாவில் டொயோட்டா இனோவா கார் உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு விரிவான கார் காப்பீட்டு விருப்பங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். பல்வேறு வகையான காப்பீடுகளைப் புரிந்துகொள்வது முதல் சரியான காப்பீட்டு பாலிசியைத் தேர்ந்தெடுப்பது வரை, தகவலறிந்த முடிவெடுப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நாங்கள் உள்ளடக்குவோம். எனவே, உங்கள்இனோவா காரைப் பாதுகாக்க நீங்கள் தயாராக இருந்தால், இந்தியாவில் விரிவான மற்றும் மூன்றாம் தரப்பு கார் காப்பீடு பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு பெறுவதற்கு கேஒய்சி ஒரு இன்றியமையாத செயல்முறையாகும். 

டொயோட்டா இனோவா காரின் சிறப்பம்சங்கள்

டொயோட்டா இனோவா கார் இந்தியாவில் பிரபலமான எம்பிவி (பல்நோக்கு வாகனம்) அதன் விசாலமான உட்புறம், வசதி மற்றும் நம்பகமான செயல்திறன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள், பவர் விண்டோ, காலநிலை கட்டுப்பாடு மற்றும் மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பல அம்சங்களுடன், குடும்பங்கள் மற்றும் சிறிய குழுக்களுக்கு வசதியான ஓட்டுநர் அனுபவத்தைஇனோவா கார் வழங்குகிறது. கூடுதலாக, அதன் வலுவான என்ஜின் மற்றும் ரீஃபைன்டு சஸ்பென்ஷன் மென்மையான கையாளுதலை வழங்குகின்றன, இது நகர்புற மற்றும் நீண்ட தூரம் ஓட்டிச் செல்பவர்களுக்கு ஏற்ற விருப்பமாக அமைகிறது. வசதி, சௌகரியம் மற்றும் செயல்திறனுடன் கூடிய,டொயோட்டா இனோவா இந்தியாவில் கார் வாங்குவோர் மத்தியில் பிரபலமான தேர்வாக உள்ளது.

டொயோட்டா இனோவா கார் காப்பீட்டை ஆன்லைனில் வாங்குவதன் நன்மைகள்

இனோவா மோட்டார் காப்பீட்டை ஆன்லைனில் வாங்குவதன் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

உடனடி அணுகல்

ஆன்லைனில் கார் காப்பீட்டை வாங்குவதன் மூலம், பாரம்பரிய ஆஃப்லைன் முறைகளுடன் ஒப்பிடும்போது உங்கள் பாலிசிக்கான உடனடி அணுகலைப் பெறலாம். ஆன்லைனில் கார் காப்பீடு வாங்கும் செயல்முறை ஒப்பீட்டளவில் நேரடியானது. உங்கள்இனோவா காப்பீட்டு விலையைக் கணக்கிட, ஆன்லைன் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம், இதைச் செய்தவுடன், உங்கள் பாலிசியை வாங்கும் செயல்முறையைத் தொடங்கலாம். தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருந்தால், இது ஒரு சில கிளிக்குகளில் சாத்தியமாகும். இறுதியாக, உங்கள் பாலிசி ஆவணத்தை உடனடியாக அணுகலாம்.

 

வசதியானது

மூன்றாம் தரப்பு கார் காப்பீட்டு பாலிசியாக இருந்தாலும் சரி அல்லது விரிவானதாக இருந்தாலும் சரி, உங்கள் பாலிசியை ஆன்லைனில் வாங்குவது சிரமமில்லாமல் இருக்கும். மேலும், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு சில கிளிக்குகளில் பாலிசி வாங்கும் செயல்முறையை தொடங்கலாம் மற்றும் நிறைவு செய்யலாம். நீங்கள் இனி காப்பீட்டு வழங்குநரின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் நான்கு சக்கர வாகன காப்பீடு ஐ தவறாமல் புதுப்பிப்பது ஒரு தேவை மற்றும் அதை ஆன்லைனில் செய்வது மிகவும் வசதியாக இருக்கும்.

 

எளிதான புதுப்பித்தல்

உங்களிடம் மூன்றாம் தரப்பு அல்லது விரிவான கார் காப்பீட்டு பாலிசி இருந்தாலும், உங்கள் வாகன பாலிசிக்கு அவ்வப்போது புதுப்பித்தல்கள் தேவை. உங்கள் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்கச் செய்வது செயல்முறையை எளிதாக்கும், ஏனெனில் புதுப்பித்தல் என்பது தொடர்ந்து மீண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

டொயோட்டா இனோவா கார் காப்பீட்டின் வகைகள்

உங்கள் டொயோட்டா இனோவா காரை காப்பீடு செய்யும்போது, உங்களுக்கு இரண்டு முக்கிய விருப்பங்கள் உள்ளன:

மூன்றாம் தரப்பினர் பொறுப்பு காப்பீடு

இந்த வகையான காப்பீடு இந்தியாவில் சட்டத்தால் கட்டாயமானது மற்றும் உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டால் மூன்றாம் தரப்பு சொத்து அல்லது தனிநபர்களுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளை உள்ளடக்கியது. இருப்பினும், உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள் அல்லது விபத்தில் நீங்கள் அடைந்த காயங்களுக்கு இது காப்பீடு வழங்காது. ஒரு கட்டாயக் காப்பீட்டு கவரேஜ் என்பதால், கார் காப்பீட்டிற்கு இது மிகவும் ஏற்ற விருப்பமாகும்.

விரிவான காப்பீட்டு கவரேஜ்

இது மிகவும் விரிவான மற்றும் விலையுயர்ந்த காப்பீட்டு பாலிசியாகும், இது பரந்த காப்பீட்டை வழங்குகிறது. இது மூன்றாம் தரப்பு பொறுப்பு மற்றும் விபத்து ஏற்பட்டால் உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள், அத்துடன் திருட்டு, தீ, இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற வகையான சேதங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான தனிப்பட்ட விபத்துக் காப்பீடும் இதில் அடங்கும். விரிவான காப்பீடு அதிக மன அமைதியை அளிக்கிறது, ஆனால் இது அதிக விலையில் கிடைக்கிறது.

உங்கள் டொயோட்டா இனோவா காருக்கு எந்த வகையான காப்பீடு தேர்வு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் போது, உங்கள் பட்ஜெட், வாகனம் ஓட்டும் பழக்கம் மற்றும் ஆபத்து நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். கார் காப்பீட்டு கால்குலேட்டர் என்பது உங்களுக்கு எந்த பாலிசி சரியானது என்பதை தீர்மானிக்க உதவும் ஒரு திறனுள்ள கருவியாகும்.

உங்களிடம் புதிய அல்லது விலையுயர்ந்த கார் இருந்தால், அல்லது நீங்கள் அடிக்கடி அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஓட்டினால், விரிவான பாதுகாப்பு சிறந்த தேர்வாக இருக்கலாம். மறுபுறம், உங்களிடம் பழைய அல்லது குறைவான மதிப்புள்ள கார் இருந்தால் மற்றும் மிகவும் குறைந்த விலையிலான காப்பீட்டு விருப்பத்தைத் தேடுகிறீர்களானால், மூன்றாம் தரப்பு பொறுப்புக் காப்பீடு போதுமானதாக இருக்கலாம்.

டொயோட்டா இனோவா கார் காப்பீடு – உள்ளடக்கங்கள் மற்றும் விலக்குகள்

  • சேர்க்கைகள்

  • விலக்குகள்

மூன்றாம் தரப்பினர் பொறுப்பு காப்பீடு

தனிநபர் விபத்து காப்பீடு

உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கான பாதுகாப்பு

விரிவான பாலிசியில் சேர்க்க நீங்கள் தேர்வுசெய்யும் வேறு ஏதேனும் கூடுதல் காப்பீடு

1 ஆஃப் 1

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துகள்

மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள்

போர் அல்லது நியூக்ளியர் ரேடியேஷன் ஆகியவற்றால் வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

வாகனத்தின் இயற்கையான வயதானதால்(பழையது) ஏற்படும் சேதம்

நியமிக்கப்பட்ட புவியியல் பகுதிக்கு வெளியே ஏற்படும் விபத்துகள்.

1 ஆஃப் 1

இனோவா கார் காப்பீட்டு ஆட்-ஆன்கள்

உங்கள் பாலிசியின் காப்பீட்டை விரிவுபடுத்த, ஆட்-ஆன்கள் உள்ளன. இருப்பினும், அவற்றைத் தேர்ந்தெடுப்பது உங்கள் டொயோட்டா இனோவா கார் காப்பீட்டு விலையை அதிகரிக்கச் செய்யும். எனவே, உங்களின்இனோவா கார் காப்பீட்டு விலையை உங்கள் பட்ஜெட்டுக்குள் வைத்துக்கொள்ள, உங்களுக்குப் பயனளிக்கும் ஆட்-ஆன்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

 

உங்களுக்கு வழங்கப்படக்கூடிய சில ஆட்-ஆன்களில் உள்ளடங்குபவை:

டொயோட்டா இனோவா கார் காப்பீட்டை வாங்குவது எப்படி?

உங்கள் டொயோட்டா இனோவா-க்கு கார் காப்பீடு வாங்க விரும்பினால், இந்த எளிய வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்:

  1. உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைப்படும் காப்பீட்டு அளவை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்குத் தேவையான கார் இன்சூரன்ஸ் வகையைத் தீர்மானிக்கவும். மூன்றாம் தரப்பு பொறுப்புக் காப்பீடு அல்லது விரிவான காப்பீட்டு கவரேஜ் ஆகியவற்றிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

  2. நீங்கள் விரும்பும் பாலிசிக்கான பிரீமியம் மற்றும் இனோவா கார் இன்சூரன்ஸ் விலையை மதிப்பிடுவதற்கு கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்தவும். வெவ்வேறு காப்பீட்டு வழங்குநர்களின் விலைகளை ஒப்பிட இது உங்களுக்கு உதவும்.

  3. உங்களுக்குத் தேவையான காப்பீடு மற்றும் ஆட்-ஆன்களை வழங்கும் மற்றும் அது வாடிக்கையாளர் சேவை மற்றும் கிளைம் செட்டில்மென்ட் செய்வதில் நல்ல நற்பெயரைக் கொண்டுள்ள காப்பீட்டு வழங்குநரைத் தேர்ந்தெடுங்கள்.

  4. பாலிசியை வாங்குவதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் உங்கள் வாகனப் பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் மற்றும் முந்தைய காப்பீட்டு விவரங்கள் போன்ற தகவல்களை வழங்கவும்.

  5. கார் இன்சூரன்ஸ் விலையை ஆன்லைனில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் அல்லது தரகர் மூலமாக செலுத்தி, உங்கள் பாலிசி ஆவணங்களைப் பெறுங்கள்.

  6. உங்களுக்கு போதுமான காப்பீடு இருப்பதையும், உங்கள்இனோவா கார் இன்சூரன்ஸ் விலை இன்னும் உங்கள் பட்ஜெட்டிற்குள்ளே இருப்பதையும் உறுதிப்படுத்த உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை தவறாமல் மதிப்பாய்வு செய்வது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கூடுதல் மதிப்பு மற்றும் காப்பீடு வழங்கினால், உங்கள் பாலிசியில் ஆட்-ஆன்களைச் சேர்ப்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

 

இந்த எளிய படிநிலைகள் மூலம், நீங்கள் எளிதாக பாலிசியை வாங்கலாம். நீங்கள் பாலிசியை வாங்குவதற்கு முன்னர், நீங்கள் வாங்க விரும்பும் பாலிசிக்கான மதிப்பிடப்பட்ட விலையைப் பெற கார் காப்பீடு கால்குலேட்டர் ஐ பயன்படுத்தலாம். 

டொயோட்டா இனோவா கார் காப்பீட்டை புதுப்பியுங்கள்

உங்கள் டொயோட்டா இனோவா கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பித்தல் ஒப்பீட்டளவில் எளிமையானது மற்றும் ஆஃப்லைனிலோ அல்லது ஆன்லைனிலோ செய்யலாம். நீங்கள் பின்பற்ற வேண்டிய படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

 

1.பாலிசிகளை ஒப்பிடுதல்

உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிப்பதற்கு முன், நீங்கள் சிறந்த டீல்களைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த பல்வேறு காப்பீட்டு வழங்குநர்களின் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்போதும் நல்லதாகும்.

 

2.உங்கள் பாலிசி காலாவதி தேதியைச் சரிபார்க்கவும்

காப்பீட்டில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க, காலாவதி தேதிக்கு முன் உங்கள் பாலிசியைப் புதுப்பித்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

3.ஆன்லைனில் புதுப்பிக்கவும்

பெரும்பாலான காப்பீட்டு வழங்குநர்கள் ஆன்லைன் புதுப்பித்தல் செயல்முறையைக் கொண்டுள்ளனர். உங்கள் காப்பீட்டு வழங்குநரின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் பாலிசியைப் புதுப்பிக்க உங்கள் பாலிசி விவரங்களை உள்ளிடவும். உங்கள்இனோவா இன்சூரன்ஸ் விலையைச் சரிபார்க்க கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

 

4.பிரீமியத்தை செலுத்தவும்

உங்கள் பாலிசி விவரங்களை மதிப்பாய்வு செய்து உறுதிப்படுத்தியவுடன், காப்பீட்டு வழங்குநர் வழங்கிய ஆன்லைன் பேமெண்ட் விருப்பங்களைப் பயன்படுத்தி பிரீமியத்தைச் செலுத்துங்கள்.

 

5.பாலிசி ஆவணத்தைப் பெறுதல்

பேமெண்ட் செலுத்திய பிறகு, உங்கள் விருப்பத்தைப் பொறுத்து, இமெயில் அல்லது அஞ்சல் வழியாக பாலிசி ஆவணத்தைப் பெறுவீர்கள்.

 

6.ஆஃப்லைன் புதுப்பித்தல்

உங்கள் பாலிசியை ஆஃப்லைனில் புதுப்பிக்க விரும்பினால், காப்பீட்டு வழங்குநரின் அலுவலகத்திற்குச் சென்று தேவையான படிவங்களை பூர்த்தி செய்து பிரீமியத்தைச் செலுத்தலாம். பாலிசி ஆவணத்தின் பிசிக்கல் நகலைப் பெறுவீர்கள்.

 

உங்கள் டொயோட்டா இனோவா கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கும்போது, முந்தைய பாலிசி ஆவணம், பதிவுச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற உங்களின் அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள்.

கோரல் செயல்முறை

காப்பீட்டு வழங்குநரைப் பொறுத்து கோரல் செய்வதற்கான கோரல் நடைமுறை மாறுபடலாம், ஆனால் நீங்கள் பின்பற்றக்கூடிய சில பொதுவான படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

 

1.உங்கள் காப்பீட்டு வழங்குநரை தொடர்பு கொள்ளுங்கள்

சம்பவம் நடந்தவுடன், உடனடியாக உங்கள் காப்பீட்டு வழங்குநரிடம் தெரிவிக்கவும். கோரலை எவ்வாறு தாக்கல் செய்வது என்பது குறித்த தேவையான விவரங்களை அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.

 

2.கோரலை தாக்கல் செய்தல்

வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது காப்பீட்டு வழங்குநரின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ நீங்கள் கோரலைத் தாக்கல் செய்யலாம். பாலிசி எண், வாகன பதிவு எண், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரம், சம்பவம் நடந்த இடம் மற்றும் சம்பவத்தின் சுருக்கமான விளக்கத்தை நீங்கள் வழங்க வேண்டும்.

 

3.ஆதார ஆவணங்களை வழங்குதல்

உங்கள் கோரலை ஆதரிக்க தேவையான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களில் எப்ஐஆர் பதிவின் நகல், உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகல், உங்கள் வாகனப் பதிவுச் சான்றிதழின் நகல் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் இருக்கலாம்.

 

4.சர்வே

உங்கள் கோரல் பதிவு செய்யப்பட்டவுடன், உங்கள் காருக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு ஒரு சர்வேயர் நியமிக்கப்படுவார். சர்வேயர் வாகனத்தை பரிசோதித்து, பழுதுபார்க்கும் செலவை மதிப்பீடு செய்து அறிக்கை தயாரிப்பார்.

 

5.பழுதுபார்த்தல் அல்லது ரீஇம்பர்ஸ்மென்ட்

சர்வேயரின் அறிக்கையின் அடிப்படையில், நெட்வொர்க் கேரேஜில் உங்கள் காரைப் பழுதுபார்ப்பதைத் தேர்வுசெய்யலாம் அல்லது பழுதுபார்ப்புச் செலவுக்கான பணத்தைத் திரும்பப் பெறலாம்.

 

6.கோரலின் பேமெண்ட்

பழுதுபார்க்கும் பணி முடிந்ததும், உங்கள் காப்பீட்டு வழங்குநர் கேரேஜில் நேரடியாக கோரல் தொகையை செட்டில் செய்து வைப்பார் அல்லது நீங்கள் அந்த விருப்பத்தைத் தேர்வுசெய்தால், பழுதுபார்ப்புக்கான செலவை உங்களுக்கு ரீஇம்பர்ஸ்மென்ட் செய்வார்கள்.

 

கோரல் செய்வதற்கு முன், உங்கள் டொயோட்டா கார் இன்சூரன்ஸ் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், சேர்த்தல் மற்றும் விலக்குகள் ஆகியவற்றை அறிய, உங்கள் பாலிசி ஆவணத்தை நீங்கள் முழுமையாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டொயோட்டா இனோவா கார் காப்பீட்டிற்கான பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

டொயோட்டா இனோவா கார் காப்பீட்டுக்கான பிரீமியம், காரின் பயன்பாடு, தயாரிப்பு மற்றும் மாடல், புவியியல் இருப்பிடம், காப்பீட்டாளர் அறிவிக்கும் மதிப்பு, ஆட்-ஆன்கள் மற்றும் பாலிசிதாரரின் ஓட்டுநர் வரலாறு போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

எனது கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா?

ஆம், உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யலாம். இருப்பினும், புதிய காரின் தயாரிப்பு மற்றும் மாடலைப் பொறுத்து பிரீமியம் மாறுபடலாம்.

எனது டொயோட்டா இனோவா கார் இன்சூரன்ஸ் பாலிசியை நான் இரத்து செய்ய முடியுமா?

ஆம், உங்கள் டொயோட்டா இனோவா கார் இன்சூரன்ஸ் பாலிசியை காப்பீட்டு நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து இரத்து செய்யலாம். பிரீமியத்தைத் திரும்பப் பெறுவது பொருந்தக்கூடிய இரத்து கட்டணங்களைக் கழித்த பிறகு செயலாக்கப்படும்.

எனது டொயோட்டா இனோவா காருக்கு விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது அவசியமா?

இல்லை, உங்கள் டொயோட்டா இனோவா காருக்கு விரிவான கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது கட்டாயமில்லை. இருப்பினும், இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சட்டப்படி மூன்றாம் தரப்பு பொறுப்புக் காப்பீடு கட்டாயமாகும்.

எனது டொயோட்டா இனோவா கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்க முடியுமா?

ஆம், காப்பீட்டாளரின் இணையதளம் மூலம் உங்கள் டொயோட்டா இனோவா கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். வெவ்வேறு பாலிசிகளை ஒப்பிட்டு, உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்வுசெய்ய கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.

பொறுப்புத் துறப்பு

நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.

சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக

  • தேர்ந்தெடுக்கவும்
    தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்
  • தயவுசெய்து உங்கள் கருத்தை எழுதவும்

எங்களை தொடர்பு கொள்வது எளிது