என்சிபி என்றால் என்ன மற்றும் இது எந்த சூழ்நிலைகளில் பொருந்தும் மற்றும் இது வாகன உரிமையாளருக்கு எவ்வாறு நன்மை அளிக்கிறது?
என்சிபி என்பது நோ கிளைம் போனஸின் சுருக்கம். முந்தைய பாலிசி ஆண்டில் எந்தவொரு கோரலையும் தாக்கல் செய்யாத பாலிசிதாரராக இருக்கும் வாகனத்தின் உரிமையாளருக்கு இது வழங்கப்படுகிறது. வாகன உரிமையாளருக்கான காப்பீட்டு பிரீமியத்தில் என்சிபி சதவீத தள்ளுபடியாக பிரதிபலிக்கிறது. உங்களிடம் என்சிபி இருந்தால், ஓன் டேமேஜ் பிரீமியத்தில் 20-50% வரையிலான தள்ளுபடியை நீங்கள் பெறலாம். என்சிபி உங்களுக்கு
4 சக்கர வாகன காப்பீடு பிரீமியம் (ஓடி பிரீமியம்) மீது சேமிக்க உதவுகிறது. இங்குள்ள விளக்கப்படம், நீங்கள் எந்த கோரலையும் தாக்கல் செய்யாத தொடர்ச்சியான ஆண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஓன் டேமேஜ் (ஓடி) பிரீமியத்தின் தள்ளுபடியை விளக்குகிறது.
ஓடி பிரீமியம் மீது 20% தள்ளுபடி |
காப்பீட்டின் முழு ஆண்டின் போது கோரல் செய்யப்படவில்லை அல்லது எந்த நிலுவையும் இல்லை |
ஓடி பிரீமியம் மீது 25% தள்ளுபடி |
தொடர்ச்சியான 2 காப்பீட்டின் போது கோரல் செய்யப்படவில்லை அல்லது எந்த நிலுவையும் இல்லை |
ஓடி பிரீமியம் மீது 35% தள்ளுபடி |
தொடர்ச்சியான 3 காப்பீட்டின் போது கோரல் செய்யப்படவில்லை அல்லது எந்த நிலுவையும் இல்லை |
ஓடி பிரீமியம் மீது 45% தள்ளுபடி |
தொடர்ச்சியான 4 காப்பீட்டின் போது கோரல் செய்யப்படவில்லை அல்லது எந்த நிலுவையும் இல்லை |
ஓடி பிரீமியம் மீது 50% தள்ளுபடி |
தொடர்ச்சியான 5 காப்பீட்டின் போது கோரல் செய்யப்படவில்லை அல்லது எந்த நிலுவையும் இல்லை |
என்சிபி எனது பிரீமியத்தை எவ்வாறு பாதிக்கிறது? நோ கிளைம் போனஸ் என்பது உங்கள் பிரீமியத்தை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். எடுத்துக்காட்டாக, கீழே உள்ள அட்டவணை மாருதி வேகன் ஆர்-க்கு ஆறு ஆண்டுகளுக்கு ரூ 3.6 லட்சம் செலுத்த வேண்டிய பிரீமியத்தை காண்பிக்கிறது:
- சூழ்நிலை 1: கோரல் செய்யப்படாத போது மற்றும் பொருந்தக்கூடியபடி பெறப்பட்ட நோ கிளைம் போனஸ்
- சூழ்நிலை 2:ஒவ்வொரு ஆண்டும் கோரல் மேற்கொள்ளப்படும்போது
ஐடிவி |
சூழ்நிலை 1 (என்சிபி உடன்) |
சூழ்நிலை 2 (என்சிபி இல்லாமல்) |
ஆண்டு |
ரூபாயில் மதிப்பு |
என்சிபி % |
பிரீமியம் |
என்சிபி % |
பிரீமியம் |
ஆண்டு 1 |
3,60,000 |
0 |
11,257 |
0 |
11,257 |
ஆண்டு 2 |
3,00,000 |
20 |
9,006 |
0 |
11,257 |
ஆண்டு 3 |
2,50,000 |
25 |
7,036 |
0 |
9,771 |
ஆண்டு 4 |
2,20,000 |
35 |
5,081 |
0 |
9,287 |
ஆண்டு 5 |
2,00,000 |
45 |
3,784 |
0 |
9,068 |
ஆண்டு 6 |
1,80,000 |
50 |
2,814 |
0 |
8,443 |
நீங்கள் எந்தவொரு வாகனத்திலும் நோ கிளைம் போனஸ் பெற்றால், நீங்கள் அதை அதே வகையின் புதிய வாகனத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யலாம் (நான்கு சக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்திற்கு, இரு சக்கர வாகனத்திலிருந்து இரு சக்கர வாகனத்திற்கு). இந்த வழியில், உங்கள் புதிய வாகனத்தின் செலுத்த வேண்டிய முதல் பிரீமியத்தில் (இது அதிகமாக இருக்கும்போது) நீங்கள் 50% வரை உங்கள் கார் காப்பீட்டிற்கும் மற்றும்
2 சக்கர வாகன காப்பீடு பாலிசிக்கும் தள்ளுபடி பெறலாம்.
ஒரு எடுத்துக்காட்டை கருத்தில் கொள்வோம்: நீங்கள் ரூ 7.7 லட்சம் மதிப்பிலான ஒரு புதிய ஹோண்டா City-ஐ வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சாதாரண சூழ்நிலைகளில், முதல் ஆண்டிற்கான காப்பீட்டிற்கு செலுத்த வேண்டிய ஓன் டேமேஜ் பிரீமியம் ரூ 25,279 ஆக இருக்கும். இருப்பினும், உங்கள் பழைய வாகனத்தில் இருந்து ஹோண்டா City-க்கு 50% நோ கிளைம் போனஸை (சிறந்த சூழ்நிலை) டிரான்ஸ்ஃபர் செய்யும் பட்சத்தில், நீங்கள் முதல் ஆண்டில் 50% சேமிப்புடன் ஓன் டேமேஜ் பிரீமியமாக ரூ 12,639 செலுத்துவீர்கள்.
எனது நோ கிளைம் போனஸை இழக்க நேரிடுமா? ஆம் என்றால், ஏன்? பின்வரும் சந்தர்ப்பங்களில் உங்கள் என்சிபி-ஐ இழக்க முடியும்:
- பாலிசி காலத்தின் போது கோரல் செய்யப்பட்டால், நீங்கள் தொடர்புடைய ஆண்டில் எந்தவொரு என்சிபி-க்கும் தகுதி பெற மாட்டீர்கள்.
- 90 நாட்களுக்கும் மேலாக காப்பீட்டு காலத்தில் இடைவெளி இருந்தால், அதாவது உங்கள் தற்போதைய பாலிசி காலாவதியான தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் நீங்கள் காப்பீடு செய்யவில்லை என்றால், நீங்கள் என்சிபி-ஐ பெற மாட்டீர்கள்.
பழைய வாகனத்திலிருந்து ஒரு புதிய வாகனத்திற்கு என்சிபி-ஐ நான் டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா? உங்கள் முந்தைய வாகனத்தின் அதே வகையாக இருந்தால் மட்டுமே என்சிபி-ஐ நீங்கள் புதிய வாகனத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும். டிரான்ஸ்ஃபர் செய்ய, பின்வரும் புள்ளிகளை நினைவில் வைத்திருங்கள்:
- உங்கள் பழைய வாகனத்தை விற்கும்போது உரிமை மாற்றப்படுவதை உறுதிசெய்து, காப்பீட்டு நோக்கங்களுக்காக ஆர்சி புத்தகம் மீதான புதிய பதிவை நகலெடுக்கவும்.
- என்சிபி சான்றிதழைப் பெறுங்கள். டெலிவரி குறிப்பின் நகலை உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி, என்சிபி சான்றிதழ் அல்லது ஹோல்டிங் கடிதத்தைக் கேட்கவும். இந்த கடிதம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
- நீங்கள் ஒரு புதிய வாகனத்தை வாங்கும்போது உங்கள் புதிய வாகன பாலிசிக்கு என்சிபி-ஐ டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள்.
என்சிபி பற்றிய சில முக்கியமான புள்ளிகளை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்
- நீங்கள் ஒரு கோரலை தாக்கல் செய்தால் என்சிபி பூஜ்ஜியமாகிறது
- ஒரே வகுப்பின் வாகனத்தை மாற்றினால் புதிய வாகனத்திற்கு என்சிபி-ஐ டிரான்ஸ்ஃபர் செய்யலாம்
- செல்லுபடிக்காலம் – பாலிசி காலாவதியான தேதியிலிருந்து 90 நாட்கள்
- என்சிபி-ஐ 3 ஆண்டுகளுக்குள் (தற்போதுள்ள வாகனம் விற்கப்பட்டு ஒரு புதிய வாகனம் வாங்கப்பட்டால்) பயன்படுத்த முடியும்
- பெயர் மாற்றம் பட்சத்தில் என்சிபி மீட்டெடுப்பு செய்யலாம்
இதனைப் பெறுவதற்கான படிநிலைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
என்சிபி பைக் காப்பீட்டில் மற்றும் கார் காப்பீட்டில், புதுப்பித்தலின் போது சிறந்த டீல்களைப் பெறுங்கள்.