ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)

விற்பனைகள்: 1800-209-0144| சேவை: 1800-209-5858 சேவை சாட்: +91 75072 45858

இங்கிலீஷ்

Claim Assistance
Get In Touch
Is There a Time Limit for Car Insurance Claims?
டிசம்பர் 25, 2022

கார் காப்பீட்டு கோரல்களுக்கு ஏதேனும் கால வரம்பு உள்ளதா?

ஒரு கார் காப்பீட்டு பாலிசியானது உங்கள் காருக்கு சேதம் ஏற்படும்போது விலையுயர்ந்த செலவுகளை திறம்பட எதிர்கொள்கிறது மற்றும் சில வகையான பழுதுபார்ப்புக்கு உட்படுகிறது. ஒவ்வொரு வாகன உரிமையாளரும் சட்டத்திற்கு இணங்க மோட்டார் பாலிசியை வாங்க வேண்டும் என்றாலும், மூன்றாம் தரப்பினர் சம்பவங்கள் ஏற்பட்டால் மட்டுமே மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு பாலிசி செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். ஒரு விரிவான பாலிசியை வாங்குவதன் மூலம் உங்கள் காருக்கு ஏற்படும் சேதமும் காப்பீட்டு வழங்குநரால் ஏற்றுக்கொள்ளப்படும். விரிவான காப்பீட்டு பாலிசிகள் விபத்துகளின் போது மட்டுமல்லாமல் இயற்கை பேரழிவுகள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின் போதும் உதவுகின்றன. அத்தகைய நிகழ்வுகளால் உங்கள் காருக்கு சேதம் ஏற்பட்டால், நீங்கள் ஒரு கோரலை மேற்கொள்ளலாம் மற்றும் இழப்பீட்டை பெறலாம். * இது ஒரு மூன்றாம் தரப்பினர் கார் காப்பீட்டு பாலிசி அல்லது விரிவான பாலிசியாக இருந்தாலும், கோரல் செயல்முறையுடன் தொடர, நீங்கள் சரியான நேரத்தில் ஒரு கோரலை எழுப்ப வேண்டும். கோரலை மேற்கொள்வதற்கான கால வரம்பு ஒவ்வொரு காப்பீட்டு வழங்குநருக்கு ஏற்ப வேறுபடுகிறது. கோரலை மேற்கொள்ள எடுக்கப்பட்ட நேரம் காப்பீட்டு கோரல் ஒப்புதல் செயல்முறையை எவ்வாறு பாதிக்கும் என்பதை இந்த கட்டுரை விரிவாக விளக்குகிறது.

மோட்டார் காப்பீட்டு கோரல்களுக்கான வழக்கமான கால வரம்பு என்ன?

மோட்டார் காப்பீட்டு கோரலை மேற்கொள்ள பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்களால் குறிப்பிடப்பட்ட கால வரம்பு நிகழ்வு ஏற்பட்ட அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் இருக்கும். சில காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரரை நிகழ்வு ஏற்பட்ட 48 முதல் 72 மணிநேரங்களுக்குள் கோரல் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றன. * இருப்பினும், இந்த கால வரம்பு ஒவ்வொரு பாலிசிதாரரும் தங்கள் கோரலை ஒப்புதல் பெறுவதற்கு கட்டாயம் பின்பற்ற வேண்டியதில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு காரின் சேதத்தை சரிபார்த்து அதற்கேற்ப பழுதுபார்ப்பதற்கு இந்த காலத்தை குறிப்பிடுகின்றன. * உதாரணமாக, வெள்ளம் காரணமாக கார் தண்ணீர் சேதத்திற்கு உட்பட்டிருந்தால், அதை பல நாட்கள் அப்படியே வைத்திருப்பது சேதத்தை மோசமாக்கும். ஒரு சில மணிநேரங்களுக்குள் அல்லது ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்குள் கோரல் மேற்கொள்ளப்பட்டால், காப்பீட்டு வழங்குநர் சரியான நேரத்தில் சேதத்தை ஆய்வு செய்து அதை பழுதுபார்ப்பதற்கு விரைவில் அனுப்பலாம்.

கோரல்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் கோரல் நிராகரிப்புக்கு வழிவகுக்குமா? 

இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் உங்களால் உங்கள் கார் காப்பீடு பாலிசி மீது கோரல் மேற்கொள்ளப்பட முடியவில்லை என்றால் , உங்கள் கோரல் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவானவை. * விபத்து, அல்லது சூறாவளி அல்லது புயல் போன்ற இயற்கை பேரழிவு போன்ற குறிப்பிட்ட துன்பகரமான நிகழ்வுடன் கையாளுவது எளிதான செயல்முறை அல்ல என்பதை காப்பீட்டு வழங்குநர்கள் புரிந்துகொள்கிறார்கள். இப்படியான ஒரு நிகழ்வுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. மற்ற படிநிலைகளை எடுப்பதற்கு முன்னர் உங்களின் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், சோகமான நிகழ்விற்கு பிறகு உடனடியாக கோரலை எழுப்ப எவருக்கும் நேரம் அல்லது ஆற்றல் இருக்காது. உதாரணமாக, ஒரு மோசமான சாலை விபத்து பாலிசிதாரரை பல நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம். காருக்கு ஏற்படும் சேதத்தை ஆய்வு செய்யவோ அல்லது கோரலை மேற்கொள்வதற்கு உதவவோ யாரும் இல்லாமல் இருக்கலாம், எனவே முன்றாம் தரப்பினர் கார் காப்பீடு கோரல் மேற்கொள்ள தாமதமாகலாம். கோரலை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படும்போது, அதற்கான சரியான காரணத்தை நீங்கள் வழங்க வேண்டும். கோரலை உடனடியாக மேற்கொள்வது சாத்தியமில்லை என்றால், காப்பீட்டு வழங்குநரை தொடர்பு கொண்டு சூழ்நிலையை அவர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், கோரல் மேற்கொள்பவரால் தாமதம் நியாயப்படுத்தப்படாவிட்டால், கோரல் நிராகரிக்கப்படலாம். *

விரைவான கோரல் ஒப்புதலை உறுதி செய்ய மனதில் வைத்திருக்க வேண்டியவைகள் 

ஒரு கோரலை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டாலும், முன்னரும் பின்னரும் சில படிநிலைகளை உறுதி செய்வது செயல்முறையை விரைவுபடுத்த உங்களுக்கு உதவும். இந்த படிநிலைகளில் உள்ளடங்குபவை:
  • அதிக கிளைம் செட்டில்மென்ட் விகிதம் (சிஎஸ்ஆர்) கொண்ட ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யவும்

கார் காப்பீட்டுத் துறையில் அதிக சிஎஸ்ஆர் என்பது காப்பீட்டு வழங்குநர் பாலிசிதாரர்களின் கோரல்களை செட்டில் செய்வதில் திறமையானவர் என்பதைக் குறிக்கும். அத்தகைய காப்பீட்டு வழங்குநரை தேர்ந்தெடுப்பது உங்கள் கோரல் ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
  • டிஜிட்டல் கிளைம் செட்டில்மென்டை தேர்வு செய்யவும் 

காப்பீட்டு நிறுவனங்கள் இந்நாட்களில் நீங்கள் டிஜிட்டல் முறையில் கோரலை எழுப்பக்கூடிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இது உங்கள் தரப்பில் ஒட்டுமொத்த கோரல் நேரத்தை குறைக்கிறது.
  • உங்கள் கோரலை உறுதிப்படுத்துங்கள்

நீங்கள் கார் காப்பீட்டு கோரலை மேற்கொள்ளும்போது, உங்கள் கோரலுக்கு தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணைப்பதை உறுதிசெய்யவும். கோரல் தாமதமாவதை தவிர்க்க நிகழ்வு/சூழ்நிலையின் புகைப்படங்களையும் நீங்கள் எடுக்கலாம்.   *நிலையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்  காப்பீடு என்பது தேவையின் பொருள். நன்மைகள், விலக்குகள், வரம்புகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, விற்பனையை முடிப்பதற்கு முன்னர் விற்பனை சிற்றேடு/பாலிசி விதிமுறைகளை கவனமாக படிக்கவும்.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? இதை மதிப்பிடவும்

சராசரி மதிப்பீடு 5 / 5 வாக்கு எண்ணிக்கை: 18

இதுவரை மதிப்பீடு எதுவும் இல்லை! இந்த பதிவை மதிப்பிடும் முதல் நபராக இருங்கள்.

இந்த கட்டுரையை விரும்புகிறீர்களா?? உங்கள் நண்பர்களுடன் இதனை பகிருங்கள்!

உங்கள் சிந்தனைகளை பகிருங்கள். கீழே ஒரு கருத்தை இடுங்கள்!

பதிலளிக்கவும்

உங்கள் இமெயில் முகவரி வெளியிடப்படாது. அனைத்து இடங்களையும் நிரப்புக